எழுதிக் கொடுத்தவனும் ஒப்பித்தவனும் சூப்பர்!! அட்டகாசமான நடிப்பு வெளுத்து வாங்கிய மெட்டிஒலி நடிகர்!!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜயின் பேச்சை நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடி உள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியல் மூலம் போஸ் ஆக நடித்து பிரபலமானவர் வெங்கட். இவர் கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம், தூம், சிங்கம், ராஜாதி ராஜா, உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம், சார், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

நேற்று விக்கிரவாண்டி விசாலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மானிட மாநில மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாடு குறித்து பல்வேறு கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த மாநாடு குறித்து விஜய் பேசிய பேச்சை நடிகர் போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது அனைவராலும் பேசும் பொருளாகியுள்ளது.

அவர் தனது பதிவில் யப்பா…. உன்கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல் பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு… மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு… இதை எழுதிக் கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்… முடிவு????. பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இதனை பார்த்த பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். தற்போது இணையத்தில் இந்த பதிவு ட்ரெண்டாகி வருகிறது. இந்த பதிவினால் விஜய் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து போஸ் வெங்கட்டை விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://x.com/DirectorBose/status/1850608173780291625

https://x.com/DirectorBose/status/1850608173780291625