பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!! 

0
120
The personal thing worked!! A famous actress who fulfilled her 10-year wish!!
The personal thing worked!! A famous actress who fulfilled her 10-year wish!!

பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!! 

பிரபல நடிகை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்

சார்லி சாப்ளின்,  பரசுராம், விசில், விகடன்,  அருவம், உள்பட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்.இவர்  இந்த படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் யாதமாகி  நின்றாய் என்ற  படத்தை  இயக்கி நடித்தார்.

காயத்ரி சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் அண்ணாமலைக்கு எதிராக சில கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். ஆனால் சமீப காலத்தில் அவர் அரசியலை விட்டு முழுமையாக விலகினார்.

அடுத்து தனது குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்ற காயத்ரி அங்கு திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தயுள்ளார். மேலும்  முடி இல்லாத தலையுடன் மயிலிறகு ஏந்தியவாறு உள்ள புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து காயத்ரி கூறுகளில் கூறுகையில்

எனது 10 ஆண்டுகால வேண்டுதல். எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி தந்ததால் எனது முடியை காணிக்கை செலுத்தி விட்டேன். வேண்டுதலை நிறைவேற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் ஏழுமலையான் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது என்று கூறிய அவர், என்ன வேண்டுதல் என்று கேட்ட பொழுது சொந்த காரணங்களுக்கான வேண்டுதல் பர்சனல் என்று பதில் கூறியுள்ளார்.

அதையடுத்து காயத்ரி ரகுமான் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். அதற்கான பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

https://www.instagram.com/reel/CvsXdvFgTkb/?utm_source=ig_web_button_share_sheet

https://www.instagram.com/reel/CvsXdvFgTkb/?utm_source=ig_web_copy_link

 

 

Previous articleதிடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!
Next articleகல்லூரிக்குள் வந்தது தப்பா? பிரகாஷ்ராஜ் காலடி பட்ட இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்!!