பிஞ்சிலேயே பழுத்த குழந்தை நட்சத்திரங்களின் பரிதாப நிலை!!

0
50

பிஞ்சிலேயே பழுத்த குழந்தை நட்சத்திரங்களின் பரிதாப நிலை!!

நவீன கால சினிமா படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ க்ளாமருக்கு பஞ்சம் இருக்காது.அந்தளவிற்கு படத்தில் ஹீரோயின்களை இயக்குனர்கள் கவர்ச்சியாக காட்டி வருகின்றனர்.
ஒரு படத்தின் ‘ஐட்டம்’ பாடலுக்கு மட்டும் கோடிகளில் செலவு செய்யும் சினிமாதுறை திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இது
நடிகைகள் மட்டும் அல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.

படிக்கின்ற வயதில் சினிமாவில் நுழைந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து, பிறகு
வாய்ப்பில்லாமல் ‘பாதி கிணற்றில்’ அதாவது படிப்பையும் முடிக்காமல் சினிமாவில் நடிக்க வாய்ப்பும் கிடைக்காமல் அலையும் நபர்கள் ஏராளமானோர்.

இதுபோல் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து தற்பொழுது சினிமா பட வாய்பிற்க்காக தொடர்ந்து தங்களை கவர்ச்சியாக காட்டி வரும் நடிகைகள் சாரி சாரி ‘பிஞ்சிலேயே பழுத்த பழங்களை’ பற்றிய தொகுப்பு இதோ

 

 

 

 

இந்த லிஸ்டில் முதலாவதாக பேபி அனிகா என்று அழைக்கப்படும் ‘அனிகா சுரேந்திரன்’ இடம்பிடித்துள்ளார்.மலையாளம் , தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.தமிழில் ‘என்னை அறிந்தால்’ , ‘விஸ்வாசம்’ போன்ற திரைபடங்களில் நடித்து அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றவர்.இப்படி படி படியாக வளர்ந்த இவர் தற்பொழுது ஹீரோயின் ஆக வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இதனால் கிடைத்தது தான் ‘புட்ட பெம்மா’ என்ற படவாய்ப்பு.இப்படத்தில் ‘லிப்லாக்’ காட்சிகளில் நடித்திருப்பார்.மேலும், அனைவருக்கும் பிடித்தமான குழந்தை நட்சத்திரமாக இருந்த பேபி அனிகா தற்பொழுது மெச்சூர் என்ற பெயரில் அவர் செய்யும் செயல் அனைவரையும் வாயடைக்க வைத்துவிட்டது.அவர் தன்னுடைய நடிப்பு திறமையயை நம்பாமல் கவர்ச்சி திறமையை மட்டும் நம்பியதாலே இப்படி ஆகிவிட்டார்.

லிஸ்டில் 2 இடத்தில் இருப்பவர் தான் ‘ரவீனா தாகா’, இவர் தமிழ் திரைப்படங்களான புலி ,ராட்சசன் ,ஜில்லா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவரும் என்ன நினைத்தார் என்று தெரியல உடனே கவர்ச்சியில் குதித்து விட்டார்.இப்பொழுது ஹீரோயின்
ஆக வேண்டும் என்பதற்காக இவரும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார். இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதில் நடித்து வருகிறார்.

 

லிஸ்டில் உள்ள மூன்றாவது நபர் ‘கேப்ரியல்லா நடாலி சார்ல்டன்’, இவரை பற்றி அனைவரும் அறிந்திருப்பர்.இவர்தான் தற்பொழுது ட்ரெண்டிங் ல் உள்ளார்.இவர் தமிழில் ‘3’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பிறகு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 ,பிக் பாஸ் போன்றவற்றில் கலந்து கொண்டு பிரபலமானார்.
தற்பொழுது ‘ஈரமான ரோஜா’ என்ற தொடரில் நடித்து வரும் இவர் சினிமா மோகத்தால் வாய்ப்பிற்காக கவர்ச்சி உடைகள் அணிந்து வலம் வருகிறார்.

 

லிஸ்டில் இடம் பிடித்துள்ள நான்காவது நபர் ‘ஐஸ்வர்யா மேனன்’,தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த இவர் பின் சினிமாவில் நுழைந்து தற்பொழுது ஹீரோயின் ஆக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.சீரியலில் நடிக்கும்போது ‘இவங்கெல்லாம் சினிமாவுக்கு வரமுடியாது’ என்று நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஹீரோயின் ரோலில் நடித்திருப்பார்.மேலும் இவரும் கவர்ச்சி என்ற பாதையை தான் பாலோ பண்ணுகிறார்.

 

 

லிஸ்டில் 5 ஆவது இடத்தில் உள்ளவர் ‘ஷ்ரியா ஷர்மா’ , இவர் பல்வேறு விளம்பர படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.மேலும் ,சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.இவ்வாறு சிறு வயதிலேயே பல வாய்ப்புகளை பெற்று நன்றாக கல்லாக்கட்டி இருப்பார்.தற்பொழுது வளர்ந்து விட்டதால் ஹீரோயின் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு கிடைத்த ஒரு சில படங்களில் நடித்தார்.அதுவும் நன்றாக ஓடவில்லை.இந்நிலையில் இவரும் மற்றவர்களை போல் படவாய்ப்பிற்க்காக திறமையை வெளிப்படுத்துறனு க்ளாமர் பாதைக்கு திரும்பிவிட்டார்.


நம்ம லிஸ்டில் கடைசியாக இருப்பவர் தான் ‘எஸ்தர் அனில்’ , ‘திரிஷ்யம்’ என்ற மலையாள படம் மற்றும் தமிழில் அதன் ரீமேக் ஆன ‘பாபநாசம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பு பாராட்டும் படி அமைந்திருக்கும்.இந்நிலையில், என்ன நினைதாரோ தெரியல முன்னணி ஆர்ட்டிஸ்டா மாறுவதற்காக எந்த எல்லைக்கும் போவேனு சொல்லி ‘சோசியல் மீடியாவில்’ க்ளாமர் உடையில் புகைப்படங்களை பதிவிட்டு அக்கப்போர் செய்து வருகிறார்.
மேலும், இவர்கள் அணியும் கவர்ச்சியான உடைகளை பார்த்து நன்றாக உள்ள பெண்களும் நாசமாகி விடுவார்கள் போல.

 

 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது;

கவர்ச்சி மட்டும் சினிமா துறையில் வாய்ப்பை தேடி தராது.அப்படி என்றால் பட வாய்ப்பிற்க்காக கவர்ச்சி, கவர்ச்சினு எல்லா பெண்களும் சுற்றி திரியவேண்டியதுதான்.மேலும் கண்ணியமாக ,கவர்ச்சி காட்டாம நடித்த பெண் குழந்தை நட்சத்திரங்கள் ,நடிகைகள் பலர் உள்ளனர்.

இவர்களை குறை சொல்வதை விட சினிமாவில் நடிக்க வைக்கிறேன், என்று படித்து கொண்டிருக்கும் குழந்தைகளை கூட்டிவந்து ஒரு சில படத்தில் மட்டும் வாய்ப்பு கொடுத்து பின் வாய்ப்பு எதுவும் வழங்காமல் படிக்கவும் வைக்காமல் அவர்களை பாதியிலயே கழட்டி விடும் இயக்குனர்களை தான் குறை சொல்ல வேண்டும்.

author avatar
Savitha