காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

0
68

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

பொதுவாக நாம் காலை எழுந்தவுடன் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய மற்றும் மூலக்கூறுகளை ஊக்குவிக்க கூடிய காலை உணவுகளை அறிந்து கொள்வோம்.

1. தேன் கலந்த வெதுவெதுப்பான நீர்
தேனில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றில் இருக்கக்கூடிய தேவையில்லா கழிவுகளை வெளியே அகற்றும். மேலும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.

2. ஊற வைத்த பாதாம்
பாதாமில் மெக்னீசியம், வைட்டமின் ஈ, புரோட்டின், நார்ச்சத்து போன்றவை உள்ளது. பாதாமை இரவு தூங்குவதற்கு முன் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கி சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

3. பப்பாளி பழம்
பழங்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய ஒரு மிகச் சிறந்த பழம் பப்பாளி பழம். குடல் இயக்கத்தை சீராக்கவும், வயிறு உப்பசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் இது பயன்படுகிறது.

4. தர்பூசணி
பழங்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மற்றொரு சிறந்த பழம் தர்பூசணி. இதில் நீச்சத்து நிறைந்து காணப்படுகிறது. கோடை காலங்களில் இதை சாப்பிடுவதால் உடலின் சூடு தணிந்து நல்ல ஒரு உடல் நலத்தை கொடுக்கும்.

5. முளைகட்டிய பச்சை பயிறு
பச்சைப்பயிரை அப்படியே சாப்பிடுவதுடன் முளைகட்டிய பிறகு சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். இதில் அதிக அளவிலான நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, வைட்டமின் பி முதலிய சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய புரதம் செல்கள் சேதமடைவது தடுக்கும்.

6. ஊற வைத்த சியா விதைகள்
இதில் புரோட்டின், நார்ச்சத்து, கால்சியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட் முதலிய சத்துக்கள் உள்ளது இந்த சியா விதைகளை இரவு தூங்குவதற்கு முன் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த சியா விதைகளை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது பாலுடன் கலந்தோ அல்லது பல கலவைகளில் மேலே தூவியோ சாப்பிட்டு வரலாம். இதை சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடக்கவும் குடல் இயக்கம் சீராகவும் பயன்படுகிறது.

7. பழைய சோறு
சாதாரண சாதத்தை விட இவ்வாறு புளித்து வைக்கப்பட்ட சாதத்தில் சத்துக்கள் மிகுந்து காணப்படும். முன்னாடி நாள் இரவு சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கும் போது அதில் உள்ள நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாகும். எனவே இதை நாம் உண்பதால் செரிமான கோளாறுகள் எதுவும் ஏற்படாது.

author avatar
CineDesk