தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !! 

Photo of author

By Amutha

தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !! 

விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இஞ்சின் இயங்கிக் கொண்டிருந்ததால் ஊழியருக்கு சோகமான முடிவு நேர்ந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ விமான நிலையத்திற்கு இரவு 10:30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியது.

விமான ஓடுபாதையில் தரை இறங்கி விமானம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதன் ஒரு பக்க இஞ்சின் இயக்கத்திலேயே இருந்து வந்தது. விமானத்தின் அருகே விமான ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அப்போது ஒரு பக்க இஞ்சின் இயங்கிக் கொண்டிருந்ததால் விமான ஊழியர் உள்ளே இழுக்கப்பட்டார்.

விமான இன்ஜினின் அதிக அளவு அழுத்தத்தால் விமான ஊழியர் உள்ளே இழுக்கப்பட்டுள்ளார். உள்ளே இழுக்கப்பட்ட அவர் இஞ்சினில் மாட்டி அங்கேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில் அந்த ஊழியரின் உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான இஞ்சின் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஏற்பட்ட அதிக அழுத்தத்தால் அந்த ஊழியர் உள்ளே இழுத்துக் கொல்லப்பட்டார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் போலீசார், விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் அதற்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.