புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விழுந்த விமானம்! குடும்பத்துடன் பிரபல நடிகர் பலியான சோகம்!

Photo of author

By Sakthi

புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விழுந்த விமானம்! குடும்பத்துடன் பிரபல நடிகர் பலியான சோகம்!

புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்கள் குடும்பத்துடன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பீட் ரேசர், ஹண்டர்ஸ், மாஸ்டர் ஆஃப் டெத், டைம்லெஸ் போன்ற பல திரைப்படங்களில் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்கள் நடித்துள்ளார். நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்களுக்கும் ஜெசிகா என்பவருக்கும் திருமணமாகி அகிக் மற்றும் மடிடா லிப்சர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்கள் தனது குடும்பத்துடன் தனி விமானம் மூலமாக கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று(ஜனவரி5) மதியம் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் அவர்கள் தனது இரண்டு மகள்களுடன் சிறிய ரக விமானம் மூலமாக பிக்யுயா தீவில் இருந்து புறப்பட்டு ஜெயிண்ட் லூசியா தீவு நோக்கி சென்றுள்ளார்.

இதையடுத்து பிக்யுயா தீவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் கடலில் விழுந்த விமானத்தில் பயணித்த நடிகர் கிறிஸ்டின் ஆலிவர், அவருடைய இரண்டு மகள்கள் மடிடா லிப்சர், அகிக், விமானத்தை ஓட்டிய விமானி ராபர்ட் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதையடுத்து கடலில் விமானம் விழுந்து விபத்து நிகழ்ந்தது குறித்து மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்பு குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விமான விபத்து நிகழ்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.