இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்!

0
259
#image_title

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று(ஜனவரி6) கோலாகலமாக தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகை என்றாலே பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமாகும். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு பெட்டிகளில் இந்த ஆண்டுக்காக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து இன்று(ஜனவரி6) புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் ஆண்டுதோறும் விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நடைபெறும். இதையடுத்து புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டுக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று(ஜனவரி6) கோலாகலமாக ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியே வருகின்றது.

தற்பொழுது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்கு 280க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு சைக்கிள், கட்டில், இருசக்கர வாகனம் போன்ற பல பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மேலும் காயம் ஏற்படும் வீரர்களுக்கு முதலுதவி அளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 415 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.