திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்?
ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் ஸ்பெயின் மற்றும் கொலோன் பகுதிக்கு செல்வதற்காக பறந்து கொண்டிருந்தது.அப்போது அந்த விமானம் திடீரென தடம் மாறி சென்றது.அந்த விமானம் திடீரென திசைதிருப்பப்பட்டதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. பின்னர் அங்கிருந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் தொடர்புகொண்டார். விமானத்திலிருந்து விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டிருந்த போதிலும் சரியாக பயனளிக்காமல் போனது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் பால்டிக் கடலில் சுவீடன் வான்வெளியில் பறந்து நேற்று இரவு 8:00 மணிக்கு வென்ட்ஸ்பில்ஸ் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என விமான அதிகாரிகள் மினி கேமரா கருவியை பயன்படுத்தி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிபொருள் தீர்ந்தபோது அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகக்கப்படுகிறார்கள் என தெரிகிறது.அதன்படி லாத்வியா, லிதுவேனியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு சிதறி கிடந்த விமானங்களை பார்வையிட்டு பணியாற்றி இறந்தவர்கள் உடல்களை தேடி வருகின்றன.