கனடாவில் உள்ள டொராரேண்ட எனும் ஏர்போர்ட்டில் சிறிய விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது,அதிர்ஷ்டவசமாக அதில் உள்ள பயனாளிகள் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை, விமானம் விழுந்ததில் உடனே தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர். ஆகவே அங்குள்ள மக்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஆனது.
விமானத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். அவர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் தான் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமானத்தில் பணிபுரியும் பெண்கள்,பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா என்று கவனுத்துடன் இருந்ததனால் தான் ஒன்றும் ஆகவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த விமானத்தை கனடா நாட்டில் உள்ள ‘பாம்பார்டியர்’ என்ற நிறுவனம் தயாரித்து இருக்கிறது. விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது விமானம் தரையிறங்கும் போது காற்றின் வேகம் அதிகரித்தால் விமானம் தலைகீழாக விழுந்தது என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த விபத்து ஏற்பட்டதால் அங்குள்ள மற்ற விமானங்கள் தாமதமாக சென்றது என்று கூறப்படுகிறது.