இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 4 வது போட்டியில் விளையாட தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி அடுத்து நடக்க இருக்கும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன்கள் கறுத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேத்யூ வேட் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் அவர்களின் இடத்தை இழந்துள்ளனர். அந்த வரிசையில் ஆரோன் பின்ச் இருக்கிறார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரில் தொடக்க வீரர் நாதன் மேக்ச்வீனி அவரது இடத்தை இழந்து தற்போது அவர் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து பேசிய ஆரோன் பின்ச் பும்ரா ஒரு உலகத்தரம் வாய்ந்த சிறந்த பந்துவீச்சாளர் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நான் அவரை பார்த்தால் மீண்டும் என்னிடம் வராதீர்கள் என்றுதான் கூறுவேன். அந்த அளவிற்கு அவர் ஒரு சிறந்த பவுலர் என்று அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.