பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி!
விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.தொடக்க பள்ளியில் 420 மாணவர்கள் உயர்நிலை பள்ளியில் 850 என மொத்தம் 1270 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் வளாகம் சீர்ரற்ற முறையில் காணப்படுகிறது. அதனை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. மழைக்காலங்களில் மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. பள்ளி வளாகத்தில் தொடர்ந்து மழைநீர் தென்குவாதால் பெற்றோர் கடந்த மூன்று நாட்களாக புகார் அளித்து வருகின்றனர்.
ஆனால் நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனையடுத்து அந்த பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை உள்ள நிலையில் இது போன்ற மழைகாலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.