விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

Photo of author

By Parthipan K

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம். மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சன் டி.வி தொலைக்காட்சியில் சனிக்கிழமை ரஜினியின் சந்திரமுகி படமும், ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படமும் ஒளிபரப்பானது.

மேலும் தற்போது அதன் TRP விவரம் வெளியாகியுள்ளது, சந்திரமுகி – (9532000) TRP புள்ளிகளை பெற்று வேட்டைக்காரன் – (83870000) திரைப்படத்தை முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய் டி.வி யில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா நிகழ்ச்சி – (94620000) பெற்றுள்ளது, இது வேட்டைக்காரன் திரைப்படத்தை விட அதிகமாகும்.