TVK வில் இணைய சத்யராஜ் கேட்ட பதவி!!

Photo of author

By Gayathri

தமிழ் சினிமா துறையில் சாதித்து தற்பொழுது அரசியலில் வெற்றி அடைய களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள், வெற்றிகரமாக தன் கட்சிக்கான பெயர் கொடி மற்றும் முதல் மாநில அளவிலான மாநாடு இவற்றை நடத்தி முடித்துவிட்டார்.

இதன் பிறகு கட்சி சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் கூட்டணி குறித்த சர்ச்சை பேச்சுகளுக்கு இன்று வரையில் முடிவு கட்டப்படாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

தற்பொழுது, நடிகர் சத்யராஜ் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம் :-

விஜய்யின் நோக்கம் வரும் 2026 தேர்தலுக்குள் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து, தவெகவை வலுவான கட்சியாக மாற்றி திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான்.

இந்த நிலையில் திராவிட கட்சிகளுக்கும், திராவிட இயக்கங்களுக்கும் ஆதரவாக பேசி வரும் பெரியார் ஆதரவாளரான சத்யராஜ், விஜய் கட்சியில் அந்தப் பதவி கொடுத்தால் சேருவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அழைப்பு வந்தால் செல்வீர்களா என தொகுப்பாளர் கேட்டதற்கு நடிகர் சத்யராஜ் நடித்த அளித்த பதில் :-

விஜய்யை சிறுவயதில் இருந்து பார்க்கிறேன். அவர் மேடையில் பேசியதே மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் என்று கூறியதில் இருந்து எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. தவெகவில் இருந்து அழைத்தால் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்பேன். நம்ம விஜய் அதெல்லாம் கேட்டால் கொடுப்பர். பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப அந்தப் பதவி கொடுங்கள் என்று கேட்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.