விலையோ ரொம்ப சீப்.. ஆனால் பழத்தில் விலை மதிப்பில்லா குணங்கள் உள்ளது!! எந்த பழம்னு தெரிஞ்சிக்கோங்க!!

நாம் ஆரோக்கியமான வாழ இயற்கையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பழங்கள்,காய்கறிகள் போன்றவை இயற்கை உணவுகளாகும்.இந்த இயற்கை பொருட்களில் ஒன்றான கொய்யா சுவை மிகுந்த கனியாகும்.

கொய்யாவில் பச்சை கொய்யா,சிவப்பு கொய்யா என்று இருவகை இருக்கிறது.முன்பெல்லாம் நாட்டு கொய்யா மரங்கள் அதிகம் இருந்தது.ஆனால் தற்பொழுது ஹைப்ரேட்டடு கொய்யா பழங்கள் தான் அதிகம் விற்கப்படுகிறது.கொய்யா மரம் வெப்பமண்டல பகுதியில் அமோகமாக வளர்கிறது.கொய்யா பழம்,கொய்யா இலை மற்றும் கொய்யா வேர்,கொய்யா பூ என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

கொய்யா பழத்தை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.கொய்யா இலையை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.

ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை சரியாக கொய்யா இலையை கொதிக்க வைத்து பருகலாம்.இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற கொய்யா பழம் உட்கொள்ளலாம்.இரத்த அளவை உயர்த்த கொய்யா பழம் சாப்பிடலாம்.

கொய்யா பழத்தில் இருக்கின்ற வைட்டமின் சி சருமம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கிறது.உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது.கொய்யா பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா பழத்தை உட்கொண்டால் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் கொய்யா பழத்தை அரைத்து பருகினால் புண்கள் குணமாகும்.

கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் ஒரு கொய்யா பழத்தை உட்கொள்ள வேண்டும்.தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் கட்டுப்படும்.உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் இருக்க கொய்யா பழத்தை உட்கொள்ளலாம்.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து கட்டுக்கோப்பாக இருக்க கொய்யா பழத்தை சாப்பிடலாம்.

கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும்.உடல் ஆரோக்கியம் மேம்பட கொய்யா பழம் மற்றும் கொய்யா இலை பானத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.