தற்பொழுது தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து கொண்டே இருப்பதற்கு சில முக்கிய காரணங்களாக வல்லுனர்களால் தெரிவிக்கப்படுபவை அமெரிக்க அதிபர் ட்ரம்பினுடைய வர்த்தகப் போர், மற்றொருபுறம் உக்ரைன் ரஷ்யா போர் இவை முடிவுக்கு வரும் பட்சத்தில் கட்டாயமாக தங்கத்தின் விலை ஆனது அதிக அளவு குறைய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை குறித்து பொருளாதார நிபுணர் ஜி. சந்திரசேகர் தெரிவித்திருப்பதாவது :-
பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அல்லது தங்கத்தை வாங்க வேண்டும் என்றாலோ சர்வதேச விஷயங்களை கவனிக்க வேண்டும் என தெரிவித்த அவர் தற்பொழுது தங்கத்தின் விலை ஆனது $300-400 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ரஷ்யா உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் துவங்கி அவர்களுடைய போர் முடிவடையும் நிலையில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தற்பொழுது நிகழக்கூடிய புவிசார் சூழல்கள் சரியானால் தங்கத்தின் விலையும் உச்சத்தில் நீடிக்காது கட்டாயமாக குறையும் என தெரிவித்திருக்கிறார்.
தங்கத்தின் விலை குறித்து வல்லுநர் குனால் ஷா தெரிவித்திருப்பதாவது :-
ரஷ்யா உக்ரைன் இடையே போரானது கடந்த 3 வருடங்களாக நிகழ்ந்து வருகிறது என்றும் தற்பொழுது ரஷ்யாவால் இந்த போரை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்தவர், கட்டாயமாக பேச்சுவார்த்தைக்கு இவர்கள் இறங்குவதற்கான சூழல் உள்ளது என்றும் அப்படி பேச்சுவார்த்தையில் இறங்கி போர் முடிவடைந்து விட்டால் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் தான் முதன் முதலில் தங்கத்தின் விலை ஆனது அதிக அளவு உயரத் தொடங்கியது என்றும் கொரோனா முடிந்த பின்பு ரஷ்யா உக்கரையின் போர் துவங்கியதால் மீண்டும் ஏற்றத்தை மட்டுமே தங்கம் விலை ஆனது சந்தித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற நிலையற்ற சம்பவங்களால் மக்கள் பயந்து தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை ஆனது உயர்வதாகவும் போர் பதற்றம் முடிவடைந்து விட்டால் தங்கத்தின் விலை குறைய அதிகளவு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.