இறங்கு முகத்தில் தங்கம் விலை..! இது தான் தங்கம் வாங்க சரியான நேரம்..!

Photo of author

By Divya

இறங்கு முகத்தில் தங்கம் விலை..! இது தான் தங்கம் வாங்க சரியான நேரம்..!

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் சாமானியர்களுக்கு தங்கம் வாங்குவது எளிதாக ஒன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அதன் விலையில் சிறு சறுக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அணியும் ஆபரணமாக உள்ள தங்கம் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகி வருகின்றது.

22 கேரட் கோல்ட்: நேற்று விலை மாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படி ஒரு கிராம் ரூ.5,870க்கும், 1 சவரன் ரூ.46,960க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து 1 கிராம் ரூ.5,850க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

24 கேரட் கோல்ட்: நேற்று விலைமாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.6,404க்கும் 1 சவரன் ரூ.51,232க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.22 குறைந்து 1 கிராம் ரூ.6382க்கும், சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.51,056க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளி: கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.76.70க்கும், 1000 கிராம் ரூ.76,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து இருப்பதால் நகை பிரியர்கள், சாமானியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.