மீண்டும் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை!! இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்வு!!
தங்கம் விலை பெயருக்கு குறைவதும் சரசரவென உயர்வதுமாக இருந்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும் அளவிற்கு நாளுக்கு நாள் தங்கம் விலை எகிறி வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றதால் ஏழை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்பொழுது நடந்து வரும் மாசி மாதத்தில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும் என்பதினால் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது.
நேற்று 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலை சற்று உயர்ந்து இருக்கின்றது. இதனால் நகை தேவை இருப்போர் கலக்கமடைந்து இருக்கின்றனர்.
சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.5,740க்கும் 1 சவரன் ரூ.45,920க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்து 1 கிராம் ரூ.5,760க்கும் 1 சவரன் ரூ.46,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.22 அதிகரித்து 1 கிராம் ரூ.6,284க்கும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்து 1 சவரன் ரூ.50,272க்கும் விற்பனையாகின்றது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து இருக்கின்றது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.77க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.