சட்டென்று சரிந்த தங்கத்தின் விலை!! சவரனுக்கு இவ்வளவு ரூபாய் குறைவா??

Photo of author

By Vijay

சட்டென்று சரிந்த தங்கத்தின் விலை!! சவரனுக்கு இவ்வளவு ரூபாய் குறைவா??
இன்று(ஏப்ரல்29) ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலையை பொறுத்தவரை அடிக்கடி உயர்ந்து அவ்வப்போது குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெற்று வரும் போர் தங்கத்தின் கடுமையான விலையேற்றத்திற்கு காரணமாக இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
கடந்த சனிக்கிழமை(ஏப்ரல்27) தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்தது.  இதையடுத்து ஒரு சவரன் தங்கம் 54160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று(ஏப்ரல்29) சனிக்கிழமை விலையைவிட இரண்டு மடங்கு குறைந்துள்ளது. அதாவது இன்று(ஏப்ரல்29) தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 53920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 6740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 58824 ரூபாய்க்கும், கிராமுக்கு 7353 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலையில் ஏற்றமோ இறக்கமோ எதுவும் இல்லாமல் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்ட அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் வெள்ளி 87.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 87500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.