கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! மீண்டும் உயர்வு..!

0
183
#image_title

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! மீண்டும் உயர்வு..!

தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடு இல்லை. தங்கத்தை காயினாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்க காரணம் அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் என்பதினால் பலரும் அதில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.

நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,825 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் உயர்ந்து இருக்குறது.

அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,860க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880க்கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கம் விலை மாற்றம் இன்றி நேற்றைய விலைப்படி 1 கிராம் ரூ.6,355க்கும், 1 சவரன் ரூ.50,840க்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.81 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.81,000க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.