மதுபானங்களின் விலை எவ்வளவு என்றாலும் அவற்றினுடைய விற்பனை விழா காலங்களை பொறுத்தவரை மிகவும் அமோகமாகவும் மற்ற நாட்களில் சராசரியாக கோடிகளை வசூலிக்க கூடிய அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட தருணத்தில் மதுபானங்களின் விலையில் மாற்றம் அதாவது மதுபானங்களின் விலை குறைய கூடிய செய்தியானது மது குறைய கூடிய செய்தியானது மது பிரியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக விஸ்கி பிரியர்கள் தங்களுடைய மதுபான செலவுகளை பெரிதும் குறைக்கும் அளவிற்கு முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பார்பன் விஸ்கியின் வரி நிர்ணயமானது தளர்வு செய்யப்பட்டுள்ளதால் இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பார்பன் விஸ்கியின் விலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வரிவிதிப்புகள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இணைந்து பேசிய பொழுது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் பார்பன் விஸ்கியின் வரிவிதிப்பு மீது தளர்வு செய்து இருக்கிறார். இரு நாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய வணிகம் நல் முறையில் நடைபெற வேண்டும் என்றால் வரிவிதிப்புகளில் தளர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறக்குமதி வரி 150 சதவீதத்திலிருந்து 40% ஆக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
1789 ஆண்டிலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்படக்கூடிய இந்த பார்பன் விஸ்கியானது அமெரிக்காவில் மட்டுமின்றி உலக நாடுகளில் தனித்துவம் வாய்ந்த மதுபானமாக பார்க்கப்படுகிறது. மற்ற மதுபானங்களை விட இது சுவையில் மாறுபட்டு இருப்பதாகவும் அந்த சுவை மது பிரியர்களை ஈர்த்திருப்பதாகலும் இது உலகம் முழுவதிலும் புகழ்பெற்றிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.