இந்த மாவட்டத்தில் பால் விலை அதிரடி உயர்வு! பொதுமக்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

Photo of author

By Parthipan K

இந்த மாவட்டத்தில் பால் விலை அதிரடி உயர்வு! பொதுமக்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

அரசின் ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை செய்து வருகின்றது.ஆவின் பாலிற்கும் தனியார் பாலிற்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் உள்ளது.அதன் காரணமாக ஆவின் பாலின் விற்பனை அதிகமாக உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினார்கள். அதன் அடிப்படையில் பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ 2 உயர்த்தப்பட்டது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் தனியார் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையில் ஒரு லிட்டர் ஒன்றுக்கு ரூ 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 45 ரூபாயாகவும்,விற்பனை விலை லிட்டருக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்திற்கு பால் வரத்து குறையும் நிலை உள்ளது.கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தில் ஒரு லிட்டர் பால் 42 ரூபாய்க்கு விற்பனையாவதே காரணம் என கூறுகின்றனர்.பால் விலை உயர்வினால் கடைகளில் டீ,காபி விலை உயர்த்த வாய்ப்புள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தமிழக அரசு பால் விலையை உயர்த்தியது குறிப்பிட்டத்தக்கது.