சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு!! மக்கள் மகிழ்ச்சி!!
சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளில் தினந்தோறும் மாற்றங்கள் உண்டாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மாதத்தோறும் முதல் தேதிகளிலும், அல்லது மாதம் இருமுறையும் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
தற்போது வணிக பயன்பாட்டில் உள்ள 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 171 குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக ஏற்ற, இறக்கமாக காணப்பட்ட சிலிண்டரின் விலை இந்த மாதம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ 351 அதிகரித்தது. பிறகு ஏப்ரல் மாதத்தில் ரூ.76 குறைந்தது 2192.50 விற்கப்பட்டது. தற்போது மேலும் ரூ 171 குறைந்து ரூ 2021.50 விற்கப்படுகிறது. இது வணிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ 1118.50 விற்கப்படுகிறது.