ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ,ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல் ,பதப்படுத்துதல் ,குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலம் பால் ,தயிர் ,வெண்ணெய் ,பால் பவுடர் ,நெய் ,பால்கோவா,மைசூர்பாக் ,ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தாயார் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் தான் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது.ஆவின் பால் சில்லறை விற்பனை விலையை உயர்த்தியது.இந்நிலையில் ஆவினில் தயாரிக்கப்படும் நெய்யின் விலை லிட்டருக்கு 50 ரூபாயாக உயத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை நெய்யின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.புதிய விலையின் படி ஒரு லிட்டர் நெய் 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் 5 லிட்டர் நெய் 2900 ரூபாயிலிருந்து 3,250 ரூபாயாக உயர்ந்துள்ளது.
500 மி.லி நெய் 290 ரூபாயிலிருந்து 315 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.200 மி.லி ரூ 130 லிருந்து 145 ஆக உயர்ந்துள்ளது.100 மி.லி ரூ 70 ல்லிருந்து ரூ 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த விலையேற்றம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.