தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!
தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிரப்பார்க்காத வண்ணம் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்று வருகிறது.
மக்கள் இந்த விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று தந்திருக்கிறது.
அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள கோயம்பேடு மார்கெட்டில் தக்காளியின் விலை ஒரு கிலோவிற்கு இருபது ரூபாய் குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ ரூபாய் 130 என்று விற்று வந்த நிலையில், தற்போது இருபது ரூபாய் குறைந்து ரூபாய் 110 க்கு விற்கப்படுகிறது.
சிறிய கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 130 க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி மட்டுமல்லாது ஒரு கிலோ பீன்ஸ் –ன் விலையானது இன்று ரூபாய் முப்பது அதிகரித்து ரூபாய் 110 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூபாய் இருநூறு என்றும், இஞ்சி ரூபாய் 220 என்றும், பூண்டின் விலை ரூபாய் 200 என்றும் விற்கப்பட்டு வருகிறது.
மக்கள் இந்த காய்கறிகளின் விலை உயர்வில் தவித்து வரும்போதே மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து பொதுமக்களின் தலையில் இடியை தூக்கி போட்டது.நாளுக்கு நாள் இந்த விலைவாசி உயர்வால் மக்கள் அனைவரும் திணறிப்போய் காணப்படுகின்றனர்.