தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை உச்சம்!! பொதுமக்கள் அவதி!!
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தக்காளி, சின்ன வெங்காயம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும்.
அது போல தக்காளி விலை உச்சத்தை அடைந்துள்ளது. முதலில் 60 ரூபாயில் தொடங்கிய தற்போது 200 ரூபாய் வரை விற்கபடுகிறது. ஜூன் மாதம் முதல் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது இன்று வரை தக்காளி விலை உச்சத்தில் உள்ளது.
இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதனை தடுக்க தமிழக அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதனையடுத்து தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இதுவரை 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.