உச்சம் தொடும் தக்காளி விலை!! இன்று சந்தையில் எவ்வளவு தெரியுமா??
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு காலத்தில் கிலோ பத்து ரூபாய்க்கு விற்ற காலம் மாறி தற்போது பத்து ரூபாய்க்கு ஒரு தக்காளி கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் தக்காளியின் விலையானது இன்று சென்னையில் ரூபாய்க்கு இருநூறுக்கு விற்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 250 ஆக உயரும் என்று வியாபாரிகள் கூறி உள்ளனர். இதனால், ஆந்திர மாநிலம், கர்நாடகா மற்றும் மகார்ஷ்டிராவின் மண்டிகளில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய நுகர்வோர் துறையானது உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் இதற்கான வேலைகளை செய்யுமாறு கூறப்பட்டிருந்தது.
தக்காளி கிலோ இருநூறு ரூபாய்க்கு விற்பது இதுவே முதல் முறையாகும் என்று கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளரான பி.சுகுமாரன் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் கேட்கும் போது அவர் கூறி உள்ளார்.
கடந்த ஜூலை இருபதாம் தேதிக்குள் தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டு வர இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக மழை பெய்து பயிர் இழப்புகள் ஏற்பட்டு விட்டது.
மேலும், ஆந்திரா மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பயிரிடப்பட்ட ஐம்பது சதவிகித தக்காளிகளானது முழுவதுமாக அழிந்து விட்டதால் இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறி உள்ளார்.
இதனாலேயே தக்காளியின் வரத்து குறைந்து விலை உயர்ந்து வருகிறது என்று அவர் கூறி உள்ளார். எனவே, இதை விரைவாக சரி செய்ய வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.