குடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!!
சிதம்பரம் அருகேபுவனகிரி அருகே50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டுஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடுப்பணை திட்டம் எப்போது துவங்கப்படும்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு. ஆதிவராகநல்லூர் கிராம பகுதி வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் புவனகிரி பகுதி விவசாயிகள், 50க்குமேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் , விவசாயம் காக்கும் பொருட்டு 95 கோடி மதிப்பில்புதிய தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தார்.
திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு நிதியையும் ஒதுக்கி தந்தார்.இது அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது.தடுப்பணை எப்போது கட்டப்படும் என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் வேதனையோடு கேள்விகளை வைத்து வருகின்றனர். கடல் நீர் தற்போது புவனகிரியில் இருந்து மேற்கு பகுதியில் 20 கிலோமீட்டர் தூரம் புகுந்து விட்டது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்துள்ளது.
அந்தத் தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை. குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை என இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் பருகுவதற்கு அற்ற நீராக இருந்து வருகிறது. பு. ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றில் அமையும் தடுப்பணை குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்துள்ளது.
அப்பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்றுள்ளன. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மக்களின் நீர் ஆதாரம், விவசாயத்தையும் காக்க வேண்டும் என புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பலமுறை நேரில் சென்று கோரிக்கை மனு அளித்து மாவட்ட நிர்வாகத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும்
சட்டசபையில் தடுப்பணை குறித்து கேள்வி எழுப்பியும் உள்ளார். ஆனாலும்அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவிடியா திமுக அரசு தடுப்பணை திட்டத்தை இன்னமும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இப்பகுதியில் கடல் நீர் 20 கிலோ மீட்டருக்கும் மேல் உள் நுழைந்து விட்டதால் விவசாயம் மற்றும் குடிநீர் அனைத்திலும் உப்பு நீர் புகுந்து மண்ணின் தன்மை மாறிவிட்டது. இதனால் இப்பகுதிகளில் சாதாரணமாக 18 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைத்த நிலையில் இன்று நூற்றுக்கணக்கான அடி சென்றாலும் நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை.
உப்பு நீரும் கடல் நீராகவும் இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாத அளவில் தரமற்று இருப்பதாக இப்பகுதி மக்கள், விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் நீரின் தரம் மாறிவிட்டதால் பலரும் மினரல் வாட்டர் என்ற பெயரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவசாயமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கடந்த அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் பயக்கும் அனைத்து திட்டங்களையும் முடக்கிய விடியா அரசு தற்போது புவனகிரி அருகே பு.ஆதிவராக நல்லூர் வெள்ளாற்று தடுப்பணையையும் அந்த கணக்கில் சேர்த்து விட்டதோ என்று என்ன தோன்றுகிறது.
மேலும் தடுப்பணை உடனடியாக கட்ட வேண்டும் என்பதற்காக புவனகிரி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் யாருடைய கோரிக்கையும் இந்த விடியா அரசு ஏற்பதாகவே தெரியவில்லை. உடனடியாக திட்டமிட்டபடி பு.ஆதிவராகநல்லூர் கிராம பகுதி வெள்ளாற்றில் தடுப்பணை கட்டாமல் போனால் இப்பகுதி விவசாயிகள்,50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து தடுப்பணை கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டத்தை கையில் எடுப்பது நிச்சயம் என்பது உண்மை.