நாலு படம் நடிச்சுட்டு இந்த சீன் தேவையா? இளம் நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்!

Photo of author

By Kowsalya

இன்றைய இளசுகளில் மனதில் நல்ல பெரிய இடத்தைப் பிடித்துள்ள நடிகை தான் அவர். அதுவும் அவர் இன்ஸ்டாகிராமில் போடும் போஸ்டர்களால் தான் என்று சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் போஸ்ட்க்கு லைக்குகள் குவிவதால் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறோம் என்று அவரே நினைத்துக் கொள்கிறாராம்.

குறும் படம் ஒன்றின் மூலம் நடிகையானவர். இவர் சினிமாவில் அடிமட்ட ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

அதிலும் இவரை குடும்பப் பெண், குடும்ப பாங்கான பெண், ஹோம்லி என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் முன்னணி நடிகரின் தந்தை இயற்றிய படத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.அந்த பிரபல ஹீரோவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்.

ஆனால் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் போடும் புகைப்படத்திற்கு அதிகமான ரசிகர்கள் உள்ளதால் தான் ஒரு முன்னணி நடிகையாக உள்ளோம் என்று நினைத்துக் கொண்டு வரும் பட வாய்ப்புகளையும் தட்டிக் கழிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் அவர் ஆரம்ப காலத்தில் நடித்த படத்தில் சிறிய விளம்பர காட்சிகளில் கூட வரமுடியாது என்று ஓவராக சீன் போடுகிறாராம். அதனால் பொது மேடையிலேயே தயாரிப்பாளர் வெளுத்து வாங்கிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

நடிச்சது நாலு படம் இதுல உன்னோட சீன் ஓவரா தாங்க முடியல என்று வெளுத்து வாங்கிவிட்டார் தயாரிப்பாளர். அதனால் குமுறி குமுறி அழுது இருக்கிறாராம் அந்த இளம் நடிகை.