பாரதி ராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

0
124
The producer who introduced Bharti Raja passed away.!! Film industry plunged in tragedy!!
The producer who introduced Bharti Raja passed away.!! Film industry plunged in tragedy!!

பாரதி ராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்.!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

இயக்குநர் பாரதி ராஜா அவர்களை தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகப்படுத்தி அவருடயை வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றது.

1977ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே ஆகும். இன்னும் இந்த காலத்தில் பதினாறு வயதினிலே படத்துக்கு தனியே ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த திரைப்படம் தான் பாராதி ராஜா அவர்களுக்கு இயக்குநராக முதல் படம். மேலும் இரண்டாவது முறையும் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தையும் ராஜ்கண்ணு அவர்கள் தயாரித்தார். கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக நடிகை ராதிகா அவர்களை தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகையாக அறிமுகப்படுத்தினார். மேலும் நடிகர் சுதாகர் அவர்களையும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ ராஜ்கண்ணு ஆவார்.

மேலும் இயக்குநர் நடிகர் பாக்கியராஜ் அவர்களை வில்லனாகவும் நடிகை வடிவுக்கரசியை கதாநாயகியாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ ராஜ்கண்ணு ஆவார்.

மேலும் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் திருப்புமுனைக்கு காரணமான திரைப்படம் மகாநதி ஆகும். இந்த மகாநதி திரைப்படத்தை தயாரித்தவரும் தயாரிப்பாளர் எஸ்.ஏ ராஜ்கண்ணு ஆவார். மேலும் பல வெற்றிப்படங்களை தயாரித்து அவருடைய சினிமா தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு தனிமுத்திரை பதித்தவர்.

இந்நிலையில் 80 வயதாகும் தயாரிப்பாளர் எஸ்.ஏ ராஜ்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாரதி ராஜா மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த தயாரிப்பாளர்.எஸ்.ஏ ராஜ்கண்ணு அவர்களின் உடல் சென்னையில் சிட்லபாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில்  பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதி ராஜா அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கலில் “16 வயதினிலே திரைப்படம் மூலமாக எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை இயக்குநராக்கி எனது வாழ்நாளில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த என்னுடைய எஸ்.ஏ ராஜ்கண்ணு அவருடைய மறைவு பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது. அவரது மறைவு எனக்கும் எனது குடும்பத்திற்கும் பேரிழப்பு ஆகும்” என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleதந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!!
Next articleபொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!