மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..

Photo of author

By Parthipan K

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..

Parthipan K

The rains are taking the people away!!. One person died in the landslide..! Rescue work is intense..

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..

கடந்த சில நாட்களாக மக்களை சிரமபடுத்தி வருகிறது இம்மழை.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் முழ்கி வெள்ளக் காடாக மாறி வருகிறது.இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை விடாது பெய்து வருகின்றது.இதனால் மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள மரங்கள் சாலைகளில் சரிந்து விழுகின்றது.

அதே போன்று சாலையில் செல்லும் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் மிக கனமழை காரணமாக குடையாத்தூர் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த நிலச்சரிவால் அந்த பகுதியில் உள்ள ஒரு வீடு முற்றிலும் மண்ணில் புதைந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின்  உடல் மீட்கப்பட்ட நிலையில் மீஞ்சிய நான்கு பேரை தேடும் பணியில் மீட்புபடையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.