இன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்!
தற்போதைய காலக்கட்ட இளையர்களுக்கு செல்போன் மேல் உள்ள மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.புகைப்படங்கள் எடுப்பது,வீடியோ எடுப்பது என்று தங்களின் நேரங்களை அதிலே பாதி செலவிடுகின்றனர்.மேலும் தாங்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பதிவிடுவதால் மக்களிடமிருந்து பாலோ மற்றும் லைக்குகளை பெறுகின்றனர்.
மேலும் அவர்களுக்கென்று சிறிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.ரசிகர்களை மகிழ்விக்க மேலும் மக்களிடமிருந்து அதிகளவு லைக்குகளை பெற தங்களின் உயிரையும் பணையம் வைக்க தயங்குவதில்லை.பல பேர் இந்த லைக்குகாக தங்களின் உயிரையே விட்டுள்ளனர்.அவ்வாறு தற்பொழுது சென்னையில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.சசெங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் பகுதியில் வசித்து வருபவர்கள் தான் மோகன்,பிரகாஷ் மற்றும் அசோக்குமார்.இதில் மோகன் மற்றும் பிரகாஷ் என்பவர்கள் ஓர் தனியார் கல்லூரியில் டிப்ளோமா படித்து வருகின்றனர்.
இவர்கள் அன்றாடம் தங்கள் கல்லூரி முடிந்ததும் அசோக் என்பவருடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு நேற்று வீடியோ எடுப்பதற்காக தண்டவாளத்திற்கு சென்றுள்ளனர்.ரெயில் வருவது கூட தெரியாமல் மூவரும் அந்த வீடியோ பதிவினில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.திடீரென்று இவர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார இரயில் வந்தது.அந்த ரயில் அதிவேகத்தில் வந்த நிலையில் இவர்கள் மூவரின் மீதும் மோதியது.அவ்வாறு மோதியதில் மூவரின் உடலும் சிதறி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர் மூவரின் உடலையும் கைப்பற்றினர்.மேலும் பிரேத பரிதசோதனைக்காக அவர்களின் உடல் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் செய்து வருகின்றனர்.ஓர் லைக்குகாக ஆசைப்பட்டு மூவரின் உயிர் போன சம்பவம் அந்த பகுத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செல்போன் மேல் இளைஞர்களுக்கு உள்ள மோகத்தால் தங்களின் உயிரை பரிதாபமாக இழந்து வருகின்றனர்.