தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

0
141

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

 

கடந்த 07.03.2022 அன்று தாளமுத்துநகர் அருகேயுள்ள பாலதண்டாயுத நகர் பகுதியில், குடும்ப பிரச்சினை காரணமாக தாய் வீட்டிற்கு வந்த மனைவி மாரிசெல்வி (19) என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்தும், அதை தடுக்க வந்த மனைவியின் தாயாரான சண்முகம் மனைவி மாரியம்மாள் என்பவரையும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கொலையுண்ட மாரிசெல்வியின் கணவரான தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த் ரவிக்குமார் மகன் 1) பொன்ராஜ் (28), அவரது நண்பர்களான திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த ராஜராம் மகன் 2) மணிகண்டன் (26) மற்றும் தூத்துக்குடி சத்யா நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் 3) முத்துகுமார் (22) ஆகிய 3 பேரையும் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் குற்றவாளிகளான பொன்ராஜ், மணிகண்டன் மற்றும் முத்துகுமார் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி கூறியதையடுத்தும்,

 

கடந்த 26.03.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் பகுதியில், கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் மகேஷ் (32) என்பவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பொன்னங்கால்புரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் வைகுண்டம் பாண்டியன் (எ) வைகுண்டம் (38) என்பவரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் குற்றவாளியான வைகுண்டம் பாண்டியன் (எ) வைகுண்டம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

 

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

 

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த் ரவிக்குமார் மகன் 1) பொன்ராஜ், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த ராஜராம் மகன் 2) மணிகண்டன், தூத்துக்குடி சத்யா நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் 3) முத்துகுமார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பொன்னங்கால்புரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் 4) வைகுண்டம் பாண்டியன் (எ) வைகுண்டம் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.