cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்தது மனதை உருக்கியுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரர். இவர் சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் எந்த வரிசையிலும் களமிறங்கி விளையாடும் திறன் கொண்டவர். இவர் தான் தமிழகத்தின் உண்மையாக கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
இவர்தான் இந்திய அணியின் அதிவேக 50,100, 150,200,250,300,350,400,450 மற்றும் 500 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர். அதுமட்டுமல்லாமல் தமிழக வீரர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருதை பெற்ற வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதை முரளி விஜய் உடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக அளவிலான விக்கெட் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை அவர் இந்திய அணிக்காக 537 விக்கேட்டுகளை எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக 300 க்கும் மேற்பட்ட ரன்களும் 3000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனயை படைத்த இரண்டாவது வீரராக உள்ளார். இதுவரை இவர் 287 சர்வதேச போட்டிகளில் விளையாடி 4,394 ரன்களும், 765 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உடன் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் 3 வது போட்டியில் தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.