சற்றுமுன் வெளியான வேளாண் பட்ஜெட்! விவசாயிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ் இனி முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி!
2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காகிதம் இல்லாத இ பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவலக ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் தற்போது 63 லட்சத்து 43 ஆயிரத்து ஹெக்டர் ஆக சாகுபடி பரப்பு உள்ளது என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும் புன்செய் நிலங்களுக்கும் உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. தானியங்கள் மட்டுமல்ல காய்கறிகள் மற்றும் பழங்கள் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பது அவசியம் எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள் வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்அப் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனால் இனி விவசாயிகள் அனைத்து விதமான முன் அறிவிப்புகளையும் அந்த வாட்ஸ் அப் குழு மூலம் தெரிந்து கொண்டு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விவசாயிகள் அதிக பயன்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.