தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு?

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு?

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி கடந்தாண்டு வரை ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா எண்ணற்ற உயிர்களை காவு வாங்கி தன்னுடைய பசியை போக்கிக் கொண்ட நிலையில்,கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது கொஞ்சம் எட்டி பார்த்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக எங்கே மீண்டும் பல உயிர்கள் பலியாகும் என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கணிசமான முறையில் உயர்ந்து வரும் கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 78 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இந்த தொற்று குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பது, முக கவசம் அணிய சொல்வது, அல்லது பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இன்புளுயன்சா வைரஸ் குறைந்து வரும் நிலையில், கொரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு வைரஸ்கள் உருவெடுப்பதாலும் அவைகளை கட்டுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய முடிவுகளை எடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து முடிவுகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.