ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!
சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி முன்பு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது.புதுச்சேரியில் அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக உள்ளோம் எனவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் காவல் துறை தரப்பில் உள்ள வழக்கறிஞர் எந்த பாதையில் இவர்கள் அனுவகுப்பு நடத்தவுள்ளனர் என்பதை குறிப்பிடவில்லை
.அனுவகுப்பின் போது கோஷங்கள் எழுப்பக்கூடாது.அதனையடுத்து தாக்குதல் நடத்தும் வகையில் எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை. இவர்கள் தமிழகம் முழுவதும் அனுமதி கேட்பதால் முடிவு எடுபதற்கு கால தாமதம் ஏற்படுகின்றது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் இராண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார்
.ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் காவல்துறையினர் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.