அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்!

Photo of author

By Parthipan K

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு போன்றவை வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி தற்போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டு வருவதற்கு மூன்று மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள் வரை காலதாமதம் ஆவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்து வருகின்றது.

அதன் காரணமாக தற்போது அந்தந்த மாவட்டங்களில் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடித்து கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதல் உடன் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அதன் பிறகு திருமணம் ஆகி ஒரு குடும்பத்தில் வசிப்பவர்கள் தனியாக ரேஷன் கார்டு பெறக் கூடாது எனவும் பழைய ரேஷன் கார்டில் வேண்டுமானால் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டு குடும்பமாக வசிப்பவர்கள் தனியாக ரேஷன் கார்டு பெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தனி ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு  முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.