உடலில் ஏற்படும் மோசமான பாதிப்புகளில் ஒன்று மூல நோய்.உள் மூலம்,வெளி மூலம் என இருவகை மூல நோய்கள் உள்ளது.மூலம் வந்தால் கடும் மலச்சிக்கல்,மலக்குடல் வீக்கம்,நரம்புகள் வீக்கம்,மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்றவை நடக்கும்.இந்த பாதிப்பு நீண்ட காலம் தொடர்ந்தால் நிச்சயம் பல உடல் உபாதைகள் ஏற்பட்டுவிடும்.எனவே மூல நோய் பாதிப்பு குணமாக கடுக்காய் பானம் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கடுக்காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
நாட்டு மருந்து கடையில் கடுக்காய் கிடைக்கும்.இதை பொடியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு கிளாஸ் சுடுநீர் தயாரித்து கடுக்காய் பொடி 15 கிராம் சேர்த்து நன்றாக கலந்து பருக வேண்டும்.இந்த கடுக்காய் பானம் மூல நோயை முற்றிலும் குணப்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)எள் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)துத்தி கீரை – ஐந்து
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் வாணலி வைத்து எள் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு ஐந்து துத்தி கீரையை அதில் போட்டு வதக்கி ஆறவிட்டு பைல்ஸ் புண்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பப்பாளி பழக் கீற்று – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
ஒரு கீற்று பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பிறகு அதில் தேன் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தாக்கம் குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)டீ ட்ரீ எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)ஆலிவ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)காட்டன் பஞ்சு – ஒன்று
பயன்படுத்தும் முறை:-
தேயிலை எண்ணெய் அதாவது டீ ட்ரீ எண்ணெயை கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த எண்ணெயில் காட்டன் பஞ்சை நினைத்து ஆசனவாய் பகுதியில் தடவினால் புண்கள் ஆறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த பேஸ்ட்டை ஆசனவாய் பகுதியில் பூசினால் மூல நோய் புண்கள் சீக்கிரம் ஆறிவிடும்.