கூட்டுறவு இயக்கத்தின் அடிவேறினை போன்று தாங்கி நிற்கக்கூடிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்காக அரசு வேர் திட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதில் புதிதாககூட்டுறவு சங்க உறுப்பினராக விரும்பினால் அருகில் உள்ள கூட்டுறவு அலுவலகத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் வாங்கி சேர்ந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பயன்கள் :-
✓ உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ. 50,000
✓ விபத்து மரணம் அடைந்தால் ரூ. 1,00,000
✓ முழு உடல்ஊனம் அடைந்தால் ரூ. 50,000
✓ இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ. 10,000
✓ பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ. 25,000
✓ இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ. 10,000
✓ உறுப்பினர் எந்த நிதி பயனும் பெறாதவராக இருந்தால் செலுத்திய சந்தா தொகைக்கு ஏற்ப ரூ. 7500 முதல் ரூ. 1 லட்சம் வரை நிதி பயன் பெறலாம்.
இத்திட்டத்தில் புதிதாக இணைய நினைப்பவர்கள் அதாவது, எல்லா கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்களும் தனி நபர் உறுப்பினர் 100 ரூபாய் மாத சந்தா செலுத்தி சேரலாம். கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலக வலைத்தளம் பக்கத்தில் மொபைல் எண் உள்ளிட்டால், மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை மீண்டும் உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள். இதன் பிறகு நம்முடைய தரவுகள் குறித்து கேட்கப்படும் கேள்விகளை பூர்த்தி செய்து இணைந்து கொள்ளலாம்.