நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

0
208
The scheme will be effective from tomorrow! Motorists shocked!
The scheme will be effective from tomorrow! Motorists shocked!

நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நகர பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினாலும் கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியவில்லை.

இந்நிலையில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லையெனில் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.ஆனால் அந்த அறிவிப்பு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தீவிரமாக நடைமுறை படுத்தவில்லை.

இந்நிலையில் நாளை முதல் புதுவையில்  ஹெல்மெட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.பலமுறை இந்த அறிவிப்பு வெளியிட்டாலும் புதுவையில் ஹெல்மெட் கட்டாயம் என்பது நடக்குமா என்ற கேள்வி எழுந்து வருகின்றது.

புதுவையில் காலை, மாலை என இரு வேலைகளிலும் பணிக்கு செல்பவர்கள் ,பள்ளி கல்லூரி செல்பவர்கள் என வாகன ஓட்டிகளால் கடும் சாலை நெரிசல் ஏற்படுகிறது.அதனால் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அவர்களின் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநவம்பர் 8-ல் முழு சந்திர கிரகணம்: எங்கெங்கே பார்க்க முடியும்? வான் இயற்பியல் நிபுணர்கள் தகவல்!
Next articleதிக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்!