மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
149

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது அந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளியில் மர்மான முறையில் உயிரிழந்தார்.அதனையடுத்து அவருடைய பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீமதியின்  பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

அந்த புகாரை போலீசார் கண்டுக்கொள்ளாத நிலையில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்,மேலும் அந்த போராட்டம் மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.அப்போது பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.பள்ளி வளாகத்தில் நின்ற வாகனங்கள் ,பள்ளி வகுப்பறை மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீ வைத்து எரிக்கபட்டது.அதனையடுத்து அந்த பள்ளி மூடப்பட்டது.

அட்டிஹன் பிறகு ஸ்ரீமதி வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் அதனை அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரித்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளி சீரமைப்பு பணிகள் செயல்பட்டது என தெரிவித்தார்.தற்போது அந்த பள்ளி வகுப்புகள் நடத்த தயாராக உள்ளது எனவும் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் முறையாக பங்குபெறவில்லை எனவும் கூறினார்.

அதனையடுத்து நீதிபதி கனியாமூர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரு மாதத்திற்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளியில் நிலவும் சூழலை பொறுத்து மற்ற வகுப்புகள் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் பள்ளிகளுக்கு சில நாட்கள் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர்.அதற்கு மேல் கூடுதல் பாதுகாப்பு தேவைபட்டால் காவல்துறையிடம் மனு அளிக்கலாம்.அதற்கான செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K