தமிழகத்தில் மாணவர்களின் உடைய கற்றல் சுமையை குறைப்பதற்காக 2025 26 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் தமிழ் பாடத்திட்டங்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்ட இருப்பதாகவும் புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருப்பதாகவும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்கள் கிடைக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
2017 2018 ஆம் ஆண்டில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த திறமை மிகுந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்றவர்களை கொண்ட உயர்மட்ட கல்வி குழுவால் பாடத்திட்டங்கள் எழுதப்பட்டு அச்சிடப்பட்டது. இவை 2018 2019 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. மேலும் அவ்வாறு எழுதப்பட்ட புத்தகங்கள் NCERT பாடத்திட்டத்தின் கீழும் குறிப்பிட்டு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடத்திட்ட மறைமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதிக அளவு கல்வி கற்றலை மாணவர்கள் படிக்க வேண்டி உள்ளது என்றும் அவர்களுடைய கல்வி சுமையை குறைக்க கணிதம் அறிவியல் போன்ற திட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். கூடவே, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தமிழ் பாடமானது அதிக அளவில் இருப்பதாகவும் அவற்றை குறைத்து தான் தேர்வில் அவர்கள் எழுதுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழ் பாடத்திட்டத்தினை முதலில் குறைக்கும் முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.
✓ அதன்படி 6,7,8 ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் இருக்கக்கூடிய 9 பாடங்கள் 8 பாடங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.
✓ 9,10 வகுப்பு மாணவர்களின் பாடநூலில் இருக்கக்கூடிய 9 பாடங்கள் 7 பாடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.
✓ 11,12 ஆவது மாணவர்களுக்கான பாட நூல்களில் இருக்கக்கூடிய 8 பாடங்கள் 6 பாடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.
குறைக்கப்பட்ட பாடநூல்கள் தற்போது அச்சிடப்பட்டு இருப்பதாகவும் ஜூன் மாதம் 2025 26 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் பொழுது இந்த புதிய பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கைகளில் கிடைக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.