நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் மீது சமீப காலமாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல உறுப்பினர்கள் நா த க வில் இருக்க விருப்பமில்லாமல் கட்சி மாறி சென்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களும் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது திமுக கட்சியின் நிர்வாகி ஜெயராமன் தனது எக்ஸ் பக்கத்தில் சீமானைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “சீமான் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கி இரவு முழுவதும் சரக்கு அடித்துள்ளார். விடிய விடிய ஒரே நாளில் ரூ. 64,000 க்கு அடித்துவிட்டு ஹோட்டலில் பணம் செலுத்தாமல் சென்றிருக்கிறார்.
இந்த செய்தியை அறிந்த ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம், சேலம் மாவட்டம் நாதக வில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்தக் கட்சி நிர்வாகிகள் எதுவும் சொல்ல முடியாமல் ஹோட்டல் நிர்வாகத்திற்குப் பணம் செலுத்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் ரூ. 5000, ரூ. 10,000 என்று பிரித்து பில் கட்டியுள்ளனர்.
ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இவர் செய்த செயல் நாதக நிர்வாகிகளுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளது. இவ்வளவு அசிங்கப்பட்டு இந்த கட்சியில் இருக்க வேண்டுமா என்று எண்ணிதான் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி இப்போது சரிந்து கொண்டே வருகிறது. சீமான் என்ன செய்யப் போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்.