அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!
தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள் சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதாக குறை கூறினர்.
இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி உறுப்பினர்களும் தனியார் கல்குவாரிக்குள் சென்றனர்.கேட்டை திறக்க சொல்லி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அங்கு இருத்த சண்முகசாமி என்ற ஊழியர் நிறுவனத்தின் உரிமையாளர் சொல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதனையடுத்து சீமான் உட்பட 75 பேர் வடக்கு புதூரில் உள்ள கல்குவரிக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் அத்துமீறி கேட்டை திறக்க முயன்றார்கள். இதை தடுக்க முயன்ற என்னை தாக்கினார்கள் என்று சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் சண்முகசாமி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் சீமான் மற்றும் அவருடன் அத்துமீறி நுழைந்த 75 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்ததற்கான சிசிடிவி காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.