இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!
சிறந்த நகைச்சுவை நடிகர்களில் “சின்ன கலைவாணர்” விவேக்கும் ஒருவர். நகைச்சுவை மட்டுமல்லாது, நம்மில் பலரை சிந்திக்கவும் வைத்தவர்.
காலத்தின் கொடுமையால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அவரின், பிரிவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இயற்கை, கலைகள், பண்பாடு, இவற்றை அதிகம் நேசித்ததால், “ஜனங்களின் கலைஞர்” என்று அழைக்கப்பட்டார்.
தான் நடித்த திரைப்படங்கள் மூலம். மக்களுக்கும், சமுகத்திற்கும் பல கருத்துக்களையும் சொல்லியவர்.
முக்கியமாக “ அரிவாள், கத்தி வைத்துக்கொண்டு சுற்றுபவர்கள் மாணவர்கள் அல்ல, சுற்று சூழலில் மரக்கன்றுகளை நட்டு வைப்பவர்களே உண்மையான மாணவர்கள் ” என கூறியிருந்தார்.
மாணவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற மறுக்கும் பெற்றோருக்கும் கருத்து கூறியுள்ளார்.
“ உங்கள் குழந்தைகள், உங்களால் உலகிற்கு வந்தவர்கள். அவர்கள் உங்களின் அடையாளம். நீங்கள் அடையாத இலக்கை, உங்கள் குழந்தைகள் மீது திணிக்கவேண்டாம். அவர்களுக்கும், ஒரு கனவு உண்டு, அதை நிறைவேற்ற விடுவது உங்கள் கடமை. அதுதான், சிறந்த பெற்றோருக்கான அடையாளம்” என்றும் அறிவுறை கூறினார்.
பெண்களுக்காக: “சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளை வீரத்துடனும், சுற்று சூழலை எதிர்த்து நின்று போராடும், தன்னம்பிக்கையுடனும் வளர்க்க வேண்டும். ஏனென்றால், பாலியல் வன்கொடுமை செய்யும் வஞ்சகர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் மட்டுமே தண்டனையாக விதிக்கும் நாடு இது. எனவே பெண்கள், நீங்கள் தான் உங்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த நடிகராக மட்டுமல்லாது, சமூகத்திற்கு கருத்துக்களை சொல்லும் கவிஞராகவும் விளங்கினார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் “, “சின்னக்கலைவாணர் விவேக், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் “ அவரின் தீவிரமான ரசிகர், என்பது அனைவருக்கும் தெரியும்.
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பற்றி விவேக், எழுதிய கவிதை இன்றைய இளைஞர்கள் மனதிலும் மறவாமல் உள்ளது.
குடியரசு தலைவருக்கு. மட்டுமின்றி மறைந்த தலைவர் கலைஞர், போன்ற பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் கவிதை எழுதியிருக்கிறார்.
இயற்கையின் மீது கொண்ட காதலால்,
நடிப்பில் மட்டுமல்லாது, கவிதைகளையும், சமூகக் கருத்துக்களையும், சொல்லி அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர்.
“மண்ணில் மரக்கன்றுகளை நட்டவர், இன்று விண்ணில் சென்றாலும்”. அவரின், பெயரும் புகழும், செய்த நன்மைகளும், என்றும் நீங்காமல் வாழும்.