வாகன ஓட்டிகளே உஷார் வருகிறது 2000 ரூபாய் அபராதம்!

0
131
#image_title

வாகன ஓட்டிகளே உஷார் வருகிறது 2000 ரூபாய் அபராதம்!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு தொடருவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைகவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற போக்குவரத்து போலிசாரின் அறிவிப்பை தொடர்ந்து வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட தொடங்கினர். இந்நிலையில் தற்போது அதற்க்கும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் செய்திகள் கூறுகின்றன.

தலைகவசம் அணிந்து கொண்டு அதன் ஸ்டிரிப் அணியாமல் சாதரணமாக சென்றால் போக்குவரத்து விதி 194D சட்டத்தின் படி 1000 ரூபாயும், மேலும் நீங்கள் அணியும் ஹெல்மெட் மிகவும் மோசமாக இருந்தாலோ, பிஐஎஸ் முத்திரை இல்லாமல் இருந்தாலோ அதற்க்கும் 1000 ரூபாய் என மொத்தம் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிமுறை சட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும், மேலும் பொதுமக்களும் தங்களது இன்னுயிரை காக்க விதி முறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.