அக்னிபத் திட்டத்தில் இந்த துறைக்கு கோடிக்கணக்கான அளவில் இழப்பு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை!
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ரயில்கள் போன்றவை எரித்து நாசமாக்கப்பட்டது. மேலும் அதைத் தொடர்ந்து சென்னையில் போராட்டம் வெடித்தது. ஜூன் பதினெட்டாம் தேதி அன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் காலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 25% பேர் மட்டுமே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரமாக பணியாற்ற முடியும். மற்ற 75% வீரர்கள் சேவா நிதி வழங்கி வீட்டிற்கு அனுப்பப்படுவார் எனவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பல இடங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து முடிந்தது அதில் மிகவும் பாதிப்படைந்தது ரயில் சேவை தான்.
மேலும் அக்னிபத் திட்டத்தில் எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ரயில்களுக்கு தீவைப்பு போன்ற செயல்கள் நடந்தது அதனால் ரயில் துறையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 30 தேதி வரை ரயில் ரத்து காரணமாக சுமார் 102 கோடியே 96 லட்சம் ரூபாய் அளவிற்கு ரயில் கட்டணம் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.