நாம் அறிந்த விதைகளும்..அறியாத மருத்துவ குணங்களும்! பயன்படுத்தி பலனை பெறுங்கள்!

Photo of author

By Divya

நாம் அறிந்த விதைகளும்..அறியாத மருத்துவ குணங்களும்! பயன்படுத்தி பலனை பெறுங்கள்!

நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் இவற்றில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் நமக்கு தெரிந்த காய்கறிகளின் விதைகள் மற்றும் பூக்களின் விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.இவ்வாறு பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்பு மருந்தாக இருக்கும் 5 விதைகளின் விவரம் இதோ.

1.பூசணி விதை

இதில் பல்வேறு ரகங்கள் இருக்கின்றன.பொதுவாக பூசணிக்காய் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.மேலும் அவற்றின் விதைகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.இதில் பொட்டாசியம்,வைட்டமின் பி 2, ஃபோலேட்,ஜிங்க்,பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.ஏகப்பட்ட மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த விதைகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.மேலும் இவை நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கும்.மேலும் இந்த பூசணி விதைகள் உடம்பில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி ரத்த அழுத்தம் ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.இதில் உள்ள ஜிங்க்,பாஸ்பரஸ் எலும்புகளில் வலிமையை அதிகரிக்கும்.மேலும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து கட்டுக்குள் கொண்டு வரும்.

2.சூரியகாந்தி விதை

சூரியகாந்தி சமயலுக்கு எண்ணையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் ஏரளமான சத்துக்கள் உள்ளது.ஆனால் இதன் விதைகளை உட்கொண்டு வருவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.இதில் இரும்புச்சத்து,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,துத்தநாகம்,வைட்டமின் ஈ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.இந்த விதைகளை உட்கொண்டு வருவதன் மூலம் உடலில் சோர்வை நீக்கி தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது.குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த விதைகள் பெரிதும் உதவுகின்றன.மேலும் குடல் புண் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இது இருக்கின்றது.மேலும் இவற்றில் உள்ள நார்ச்சத்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.மேலும் இந்த விதைகளில் இருக்கும் ஓலிக் என்ற கொழுப்பு அமிலம் இதயம் ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றது.

3.எள் விதை

இவை சமையல் எண்ணெய் தயாரிக்க பயன்படுகின்றது.இவற்றில் வெள்ளை எள் மற்றும் கருப்பு எள் என்று இரண்டு வகை உள்ளது.இந்த விதையில் புரோட்டீன்கள்,கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் மிகுந்து காணப்படுகிறது.இந்த விதைகளில் அதிகம் நார்ச்சத்து இருப்பதினால் அவற்றை உட்கொண்டு வந்தால் செரிமானம் பிரச்சனை,எலும்பு சம்மந்தமான பிரச்சனைகள் சரியாகும்.இதில் அதிக அளவு கனிமச்சத்துக்கள் இருப்பதால் அவை எலும்புகளின் தேய்மானத்தை கட்டுப்படுத்தி எலும்பை வளர்ச்சியடைய உதவும்.மேலும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றலை எள் கொண்டுள்ளது.

4.முருங்கை விதை

முருங்கை மரத்தில் இருக்கின்ற இலை,பூ,காய்,பட்டை,வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.மேலும் முருங்கை விதைகள் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.உடல் கொழுப்பை கரைக்க நினைக்கும் நபர்கள் முருங்கை விதைகளை எடுத்து கொள்ளலாம்.இவற்றில் கொழுப்பை கரைக்க உதவும் ஒலிக் என்ற அமிலம் அதிக அளவில் உள்ளது.மேலும் ஆண் குறி விறைப்புத்தன்மை குறையாமல் இருக்க இந்த முருங்கை விதைகள் பெரிதும் உதவுகின்றது.மேலும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மையைத் தூண்டும் ஆற்றல் இவ்விதைக்கு உண்டு.மேலும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு.

5.சப்ஜா விதை

பார்ப்பதற்கு எள் போன்று தோற்றம் அளிக்கும் சப்ஜா விதை திருநீற்று பச்சிலை என்ற செடியில் இருந்து உற்பத்தியாகிறது.இதில் துத்தநாகம்,சல்பர்,ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்,ஒமேகா 3, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து,நார்ச்சத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.உடல் சூடு,மூலம் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.மேலும் உடலில் உள்ள கழிவுகள் முழுவதையும் வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த சப்ஜா விதைகள்.மேலும் இந்த விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி உடல் எடையை விரைவில் குறைப்பதோடு,பசி உணர்வை கட்டுப்படுத்தும்.இவற்றில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் உடலில் ரத்த சோகை வராமல் தடுக்கும்.