சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்..வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு..!!

0
336
The serial popularity hit the jackpot
The serial popularity hit the jackpot

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்.. வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு..!!

விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் வெற்றி வசந்த் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிஆர்பியிலும் இந்த சீரியல் நல்ல ரேட்டிங் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியல் பிரபலம் ஒருவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவர் வேறு யாருமல்ல சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீதேவா தான். இவர் விஜேவாக தனது கெரியரை ஆரம்பித்த ஸ்ரீதேவா பல ஆண்டுகளாக அவருக்கான வாய்ப்பை தேடி அலைந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முதலில் இந்த சீரியலில் நடிக்கலாமா வேண்டாமா என ஸ்ரீதேவா யோசித்துள்ளார். ஏனெனில் இனி சீரியலே வேண்டாமென அவர் வெறுத்திருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. அதனால் யோசித்த ஸ்ரீதேவா சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் அவரே ஆச்சரியப்படும் அளவிற்கு அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியலுக்கு பின்னர் ஸ்ரீதேவா பிரபலமாகி விட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்த சீரியலில் இவரின் கேரக்டர் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவா வெள்ளித்திரையில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இதில் வளர்ந்து நடிகையான திவ்யா துரைசாமியுடன் இணைந்து நடிப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவாவே கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleவிஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!
Next articleதங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!!