எழுமலையான் பக்தர்களுக்கு வேதஸ்தானம் கொடுத்த ஷாக்!! இனி தரிசனம் இல்லை!!
பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருப்பதிக்கு செல்ல இந்த நாள் மிகவும் உகர்ந்த நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் அக்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பபட்டிருந்தது.அவர்கள் கோரிக்கை நிறைவேற்றும் விதமாக அதற்கான வசதியும் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் வருகின்ற 17ம் தேதி கோவிலில் ஆனி மாத ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக செய்யும் விதமாக கோவில் முழுவதையும் சுத்தம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இவை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பணி நடைபெறுவதால் 7 மணி நேரத்திற்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.இதனால் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.